பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதை வேதனையளிப்பதாகவும், இந்தக் கொடூரக் குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளதை உணர்த்த வேண்டும் என்றும் சீமான் வலியுறத்தியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாதுகாப்பற்ற ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பதை கோவை பாலியல் சம்பவம் உணர்த்துவதாகவும், இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க கடுமையான சட்டங்கள் உள்ளன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் கூறினார் .
சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் கொண்டுவந்திருப்பதன் மூலம் பீகாரில் இருந்து, தமிழ்நாட்டில் குடியேறியுள்ளவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க மத்திய பிஜேபி திட்டமிட்டிருப்பதாக குறைகூறினார்.

















