களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக இருப்பதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் இதனை தெரிவித்த அவர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக-வுக்கு வாக்களித்தபோது, அது தீயசக்தி என்று விஜய்க்கு தெரியாதா என்றும் கேள்வி எழுப்பினார்.
ஆட்சிக்கு வரும் நோக்கில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதிகளால், இன்று அரசு ஊழியர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் வீதியில் இறங்கி போராடம் நிலை ஏற்பட்டிருப்பதாகவும், ஈரோடு கடப்பாரை துருப்பிடித்துவிட்டதாக, சீமான் கூறினார்.
விஜய்க்கு திமுக மட்டும் தான் எதிரி என்றும், தனக்கு திமுக, அதிமுக, பிஜேபி, காங்கிரஸ் என நான்கு எதிரிகள் இருப்பதாகவும் சீமான் குறிப்பிட்டார்.
















