SIR குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்; கனிமொழி

மழை காலத்தில் மக்களை பாதுகாக்க வேண்டிய பணியை விட்டுவிட்டு, எஸ்.ஐ.ஆர் பணியில் ஈடுபட வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளதாக, திமுக எம்.பி. கனிமொழி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த திமுக எம்.பி.க்கள் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றத்தில் எஸ்.ஐ.ஆர் பிரச்சனையை எழுப்ப வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், 100 நாள் வேலை திட்டத்திற்கும், கல்வித் துறைக்கும் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியையும் விடுவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து வலியுறுத்த இருப்பதாக கனிமொழி தெரிவித்தார்.

Exit mobile version