EPS-க்கு பதில் சொல்லவதைவிட முதல்வருக்கு வேறு வேலை இருக்கு – கனிமொழி காட்டம்

எடப்பாடி பழனிசாமியுடன் விவாதம் செய்வதற்கு முதல்வருக்கு நேரம் கிடையாது என்று திமுக எம்.பி.,கனிமொழி கூறியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் அமைந்துள்ள அருங்காட்சியத்தை பார்வையிட்ட அவர், 100 நாள் வேலை திட்டத்தை முடக்குவதற்கே மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

வெள்ள நிவாரண பொருள்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி பிரபலமான எடப்பாடி பழனிச்சாமியுடன் விவாதம் பண்ண முதல்வருக்கு நேரம் இருக்காது என்றும், அவருக்கு கீழலுள்ள யாரிடம் வேண்டுமானாலும் அவர் விவாதம் செய்யட்டும் என்றும், கனிமொழி கூறினார்.

Exit mobile version