அதிமுக-வை விட்டு தான் எங்கும் போக மாட்டேன் என்றும், கட்சியின் அனுமதியோடு தனது ராயபுரம் தொகுதியில் மட்டும்தான் போட்டியிடுவேன் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வரும் 5-ம் தேதியன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவுநாளை முன்னிட்டு, சென்னையில் அமைதிப் பேரணிக்கு அனுமதி கோரி, மாநகர காவல் ஆணையரிடம் கோரிக்கை மனுவை ஜெயக்குமார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கோட்டையனைப் பொறுத்தவரை தான் எப்போதும் மதிக்கும் ஒரு தலைவர். த.வெ.க-வில் இணைந்திருப்பது அவர் எடுத்த முடிவு என்பதால் தான் கருத்து சொல்ல முடியாது என்றார். அதேநேரத்தில், தான் எப்போதும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தொடர்பவன் என்றும், அதிமுக-வை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்றும் ஜெயக்குமார் கூறினார்.

















