அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமியும், சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அதன்படி, அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. சிறந்த வீரருக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் செனுரன் முத்துசாமி, பாகிஸ்தானின் நோமன் அலி, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் இடம்பெற்றனர். இதேபோல், சிறந்த வீராங்கனைக்கான பட்டியலில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா ஆஸ்திரேலியாவின் ஆஷ் ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை தென் ஆப்பிரிக்காவின் செனுரன் முத்துசாமி வென்றார். சிறந்த வீராங்கனைக்கான விருதை தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் வென்றுள்ளார்.

















