ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.
ஹாங்காங் நாட்டின் தை போ நகரில் வாங் பெக் கோர்ட் காம்பிளக்ஸ் பகுதியில் 35 தளங்களைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மேல்மாடி தளங்களுக்கும் வேகமாக பரவியது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர். மேலும் 29 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்னும் 279 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.















