அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொது எதிரியான திமுக-வை வீழ்த்துவதற்கு ஒத்த கருத்துடைய அனைத்துக் கட்சிகளும் கூட்டணி சேர்ந்து போட்டியிட வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னையை அடுத்த திருநின்றவூரில் த.மா.கா-வின் 12-வது ஆண்டு தொடக்கவிழாவை ஒட்டி, பொதுமக்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.,வாசன், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். திமுக என்னும் பொது எதிரியை வீழ்த்துவதற்கு அதிமுக கூட்டணியில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணைய முன் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
