சென்னை ரிச்சி சாலையில் குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், வீடு முழுவதுமாக எரிந்து சாம்பலானது.
சென்னை ரிச்சி சாலையில் வசித்து வருபவர் வீரா. இவருடைய குடிசை வீட்டில் திடீரென்று தீப்பற்றியது. அந்த தீ வீடு முழுவதும் பரவியதில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் தீயணைப்புத்துறையினர் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர். என்றாலும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. தீவிபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

















