என்னை பாதுகாத்த இந்திய மக்களுக்கு நன்றி – ஷேக் ஹசினா உருக்கம்

தனக்கு பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார்.

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடந்த மாணவர் புரட்சியால் அவாமி ஷேக் ஹசீனா, பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி வந்தார். இதையடுத்து பதவியில் உள்ள முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தது தான், இருநாட்டு ஏற்பட்டுள்ள விரிசலுக்கு காரணம் என்று குற்றம்சாட்டி வருகிறது.

இந்த நிலையில், வங்கதேச இடைக்கால அரசின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து பேசிய ஷேக் ஹசீனா, இந்தியா- வங்கதேசம் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதற்கு நான் காரணமல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத இடைக்கால அரசின் வன்முறை மற்றும் பயங்கரவாத கொள்கைகளுமே காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். இத்தனை நாட்கள் பாதுகாப்பான அடைக்கலம் கொடுத்த இந்திய மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஹசீனா கூறியுள்ளார்.

Exit mobile version