டெல்லியில் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. காற்றின் தரக்குறியீட்டை பரிசோதிக்கும் 39 கண்காணிப்பு நிலையங்களில் 21 நிலையங்களில் தரக்குறியீடு 400-க்கும் மேல் அதிகரித்துள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலையில் டெல்லியில் புகைமூட்டத்துடன் வானம் காணப்பட்டதுடன், பல இடங்களில் காற்றின் தரக்குறியீடு 392 முதல் 400 வரை இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே நச்சுத்தன்மையுடன் காற்றின் தரம் நீடித்து வருவதாக வாரியத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. டெல்லி மட்டுமல்லாது, நொய்டா உள்ளிட்ட என்சிஆர் பகுதிகளிலும் காற்று மாசின் தரம் இதே நிலையில் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















