வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயல் காரைக்காலுக்கு 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 490 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இதனால், காவிரி டெல்டா மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் நாளை வட தமிழகத்திற்கும் புதுச்சேரிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள டிட்வா புயல் மணிக்கு 3 முதல் 4 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்நிலையில், புயல் காரணமாக காவிரி டெல்டா உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் வடதமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் இடையே நாளை கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை அதி கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர். கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















