உலகக் கோப்பை குத்துச்சண்டை தொடரின் இறுதிப் போட்டியில், இன்று ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்று, இந்திய வீராங்கனைகள் அசத்தியுள்ளனர். உலகக் கோப்பை குத்துச்சண்டை தொடரின் இறுதிச் சுற்றுப் போட்டிகள் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று வருகின்றன.
இதில் இன்று நடைபெற்ற மகளிர் 54 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் ப்ரீத்தி பவார், இத்தாலி நாட்டின் சிரின் சராபி-ஐ தோற்கடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
இதேபோல, 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மீனாக்ஷி ஹூடா, உஸ்பெகிஸ்தானின் ஃபோஸிலோவா ஃபெர்ஸோனாவை வென்று தங்கப் பதக்கத்தைத் தட்டிச்சென்றார்.
70 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அருந்ததி சௌத்ரி, உஸ்பெகிஸ்தான் வீராங்கனை அஸிஸா ஸோகிரோவாவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.
அதுமட்டுமின்றி 80 கிலோ எடைப் பிரிவிலான போட்டியில், இந்தியாவின் நுபுர் ஷியோரன், கஜகஸ்தான் நாட்டின் சோடின் போயாவை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார்.















