செங்கோட்டையன் தற்போது அ.தி.மு.க.வில் இல்லாததால், அவர் த.வெ.க.வில் இணைந்தது குறித்து கருத்துச் சொல்ல ஏதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி ஜனநாயக நாட்டில் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்றும் செங்கோட்டையன் தற்போது அ.தி.மு.க.வில் இல்லாததால், அவர் குறித்து கருத்து சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். பலமுறை செய்தியாளர்கள் அது குறித்து கேள்வி கேட்டபோது அதனை தவிர்த்து விட்டு சென்றார்.
