தமிழகத்தில், எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
ஆதரவற்றோர் மற்றும் வீடு இல்லாதவர்கள் இரவில் தூங்குவதற்காக மாநகராட்சி சார்பில் 86 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், மெரினா கடற்கரையில் இரவு நேர காப்பகம் கட்டப்பட்டுள்ளது. இந்த காப்பத்தில் குடிநீர், கழிப்பறை, நவீன தங்கும் அறை, மின்விசிறிகள், பாய் மற்றும் தலையணை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.
இந்த புதிய காப்பகத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் காப்பகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகளை அவர் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மெரினா கடற்கையில் கூடுதலாக, இது போன்ற காப்பகம் அமைக்ப்படும் என்று கூறினார்.
எஸ்.ஐ.ஆர் பணிகளை தொடக்கத்தில் இருந்தே திமுக எதிர்த்து வந்ததாக குறிப்பிட்ட உதயநிதி, நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமான வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க திமுக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
















