வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கும், த.வெ.க. கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருக்கும் என்று, டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், மண்டலப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் கள நிலவரம் வேறு, தமிழ்நாட்டின் நிலவரம் வேறு என்றார். தமிழ்நாட்டை பொறுத்தவரை, தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக கூட்டணி இடையே தான், சட்டமன்ற தேர்தலில் போட்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.
கூட்டணி குறித்து டிசம்பர் அல்லது ஜனவரியில் முடிவெடுக்கப்படும் என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். அ.ம.மு.க.வை தவிர்த்துவிட்டு எந்த கூட்டணியும், தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க முடியாது என்றும், டி.டி.வி.தினகரன் கூறினார்.

















