விஜய் முதலில் மேக் அப்பை களையுங்க – எஸ்.வி சேகர் விமர்சனம்

நடிகர் விஜய் இன்னும் சினிமா மேக்கப்பை கலைக்கவில்லை என நடிகர் எஸ்.வி சேகர் விமர்சித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு, எஸ்.வி சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார் சிறந்த மாநிலம் என்றால், அங்குள்ள தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு ஏன் வேலைக்கு வருகிறார்கள் என கேள்வி எழுப்பினார்.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பிஜேபி, கூட்டணியில் விஜய் இணைந்தால் ஒரு சிறுபான்மையினர் ஓட்டு கூட அந்த கூட்டணிக்கு கிடைக்காது என்றும் அவர் கூறினார்.
கரூர் விவகாரத்தில் விஜய் வழங்கிய நிதி உதவியை சங்கவி என்ற பெண் திருப்பி அனுப்பியதை பாராட்டிய எஸ்.வி சேகர், விஜய் இன்னும் குழந்தைதனமாகவே இருப்பதாகவும் விமர்சித்தார்.

Exit mobile version