வங்க கடலில் இலங்கைக்கு அருகே, புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு வடமேற்கு நோக்கி மெதுவாக நகர வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் தமிழ்நாட்டில், இன்று முதல் வரும் 18 ஆம் தேதி வரை, பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். வரும் 17 ஆம் தேதி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
இதனிடையே, ராமேஸ்வரம் அருகே, கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடல் சீற்றத்தால் படகுகள் ஒன்று கொன்று மோதி, சேதம் ஏற்படுகிறது. இதனால், மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.



















