இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்ககடல் பகுதிகள் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் குளிர்கால பருவமழை இயல்பைவிட 42 சதவீதம் கூடுதலாகவும், சென்னையில் இயல்பைவிட ஆயிரத்து 429 சதவீதம் கூடுதலாகவும் பெய்துள்ளதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
