ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமின் வழங்கப்பட்ட இருவர் சாட்சியங்களை அழிக்க முயற்சிப்பார்கள் என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தெரிவித்துள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ஒராண்டுக்கு மேல் சிறையில் இருப்பதால் ஜாமீன் வழங்க கோரி சதிஷ்குமார் மற்றும் சிவா ஆகியோர் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் 2 பேருக்கும் தலா 10 ஆயிரம் மற்றும் அதே தொகைக்கு இருநபர் உத்தரவாதத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக டெல்லி சென்றுள்ள ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஜாமின் வழங்கியவர்கள் வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க முயற்சிப்பார்கள் என்று அச்சம் தெரிவித்தார்.