ஜிஎஸ்டி குறைக்கப்பட்டத்தால் நாடு முழுவதும் தீபாவளி பொருள்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் 3 பேரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி விற்பனை அதிகரித்துள்ளதாகவும், ஆட்டோ மொபைல் துறையில் விற்பனை அதிகரித்த வண்ணம் இருக்கிறது என்றும், இதனால் தற்சார்பு இந்தியாவின் வளர்ச்சிக்கு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளதாகவும், 54 பொருள்களின் விலையை மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் கூறினார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்கள் நுகர்வோர்களை சென்றடைவதை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அமெரிக்காவின் வரிப்போருக்கு எதிரான சலுகையாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் மேற்கொள்ளவில்லை என்றும், நிர்மலா சீத்தாராமன் விளக்கமளித்தார்.
















