1.தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள srisen பார்மா மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ‘கோல்ட்ரிஃப்’ (coldrife) என்ற இருமல் மருந்தை குடித்த மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 20 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் அந்த மருந்தை பரிந்துரை செய்த டாக்டர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை, சென்னை அசோக் நகரில் உள்ள அவருடைய வீட்டில் உள்ளுர் போலீசார் உதவியுடன் மத்தியப் பிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.
2.முதலமைச்சர் ஸ்டாலின், கொடிசியா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உலக புத்தொழில் மாநாட்டை தொடங்கி வைத்தார். 40 நாடுகளைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் தமிழகத்தின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
3.கர்நாடகா மாநிலத்தில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மாதவிடாய் விடுப்பு கொள்கை 2025க்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன்படி பெண் ஊழியர்கள் அனைவரும் மாதத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் அதாவது menstrual லீவ் எடுத்துக் கொள்ளலாம் . இது அரசு அலுவலகங்கள் மட்டுமல்லாமல் மாநிலத்தில் செயல்படக்கூடிய அனைத்து ஐடி நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் என அனைத்திற்குமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4.TCS நிறுவனம் தனது காலாண்டு முடிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புதிதாக டேட்டா சென்டர் துறைக்குள் பெரிய அளவிலான முதலீட்டுடன் நுழைய உள்ளதாக அறிவித்துள்ளது. இதுவரையில் இத்துறைக்குள் செல்லாத டிசிஎஸ் இந்தியாவில் டேட்டா லோக்கலைஷேஷனுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ள வேளையில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளது.
5.ரிலையன்ஸ் கன்ஸ்யூமர்ஸ் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் அதாவது RCPL சந்தையில் முன்னணி நிறுவனமாக வருவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை செய்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக பாரம்பரியமிக்க ‘வெல்வெட்’ நிறுவனத்தின் தயாரிப்புகளை புதுப்பித்து உலகளவில் மீண்டும் சந்தைப்படுத்துவதற்கான உரிமத்தை ஆர்சிபிஎல் சமீபத்தில் பெற்றது. முதல்கட்டமாக நவீன காலச்சூழலுக்கேற்ப புதுமைகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள வெல்வெட் நிறுவனத்தின் அழகு சாதனப்பொருட்கள் சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டன.
6.HMD நிறுவனம் இந்தியாவில் ஹைபிரிட் ‘டச் 4ஜி’ போனை அறிமுகம் செய்துள்ளது. பின்லாந்து நாட்டை சேர்ந்த ஹியூமன் மொபைல் டிவைசஸ் நிறுவனம் மொபைல் போன்களை உற்பத்தி செய்து உலக அளவில் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2016 முதல் நோக்கியா பிராண்டில் ஸ்மார்ட்போன் மற்றும் ஃபீச்சர் போன்களை விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம் தற்போது 3.2 இன்ச் டச் டிஸ்பிளே கொண்ட கிளவுட் அடிப்படையிலான அப்ளிகேஷன்கள் மூலம் 13 மொழிகளில் செயல்படும் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை 4000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
7.டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக, தென் மாநிலங்களில் எரிவாயு சிலிண்டர்களுக்கு, தட்டுப்பாடு ஏதும் ஏற்படவில்லை என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.புதிய வாடகை ஒப்பந்தத்தில், 3 ஆயிரத்து 879 லாரிகள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என, கட்டுப்பாடுகளை எண்ணெய் நிறுவனங்கள் விதித்துள்ளன. இதை எதிர்த்து எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
8.பிரிட்டன் தேர்தலில் ரிஷி சுனக் தோற்றுப்போன நிலையில், பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ரிஷி சுனக் அதேவேளையில், மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆந்த்ராப்பிக் ஆகிய பெரு நிறுவனங்களில், பகுதி நேர ஆலோசகராக பணியாற்றும் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இதுக்குறித்து தனது linked in பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.