குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் இன்றும் நாளையும் புதுச்சேரி, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் பயணம் மேற்கொள்கிறார்.
இன்று காலை புதுச்சேரி வரும் அவர் மகாகவி பாரதியாரின் சிலையைத் திறந்து வைக்கிறார். மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீட்டுவசதித் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழாவிலும் சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்.
தொடர்ந்து மாலை கேரளாவுக்குச் செல்லும் அவர் திருவனந்தபுரம் விழா 2025-ல் கலந்து கொள்ளவுள்ளார்.
நாளை கேரள மாநிலம் வர்க்கலாவில் நடைபெறும் 93-வது சிவகிரி யாத்திரையில் குடியரசுத் துணைத்தலைவர் பங்கேற்கவுள்ளார். திருவனந்தபுரம் மார் இவானியோஸ் கல்லூரியின் பவள விழா கொண்டாட்டங்களின் நிறைவு நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ள உள்ளார்.
பின்னர் மதியம் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை விமான நிலையம் வரும் சி.பி. ராதாகிருஷ்ணன் கார் மூலம் ராமேஸ்வரம் சென்று காசி தமிழ் சங்கமம் 4.0-ன் நிறைவு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மாலையே அவர் டெல்லி திரும்புகிறார்.
