போக்குவரத்து தொழிலாளர்களின் நிலுவை தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதியளித்துள்ளதால், 62 நாட்கள் நடத்திய காத்திருப்பு போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சி.ஐ.டி.யூ தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் இதனை தெரிவித்தார். போக்குவரத்து துறையில் தனியார்மயம் என்பது பொதுமக்களை பாதிக்கும் என்பதால் முற்றிலுமாக அதை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பொங்கல் பண்டிகையின் போது கொடுத்த வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமாக நடத்தப்படும் என்றும் சௌந்ர்ராஜன் எச்சரிக்கை விடுத்தார்.
 
			















