விஜய் குறித்த வேல்முருகன் பேச்சு – நடவடிக்கை எடுக்க உத்தரவு

நடிகர் விஜய் நடத்திய கல்வி விருது வழங்கும் விழா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

பொதுத்தேர்வில் முதன்மை இடங்களை பிடித்த மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் அண்மையில் விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சி குறித்து வேல்முருகன் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால் அவருக்கு எதிராக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் த.வெ.க வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தலைமை தேர்தல் அதிகாரிக்கு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதன் அடிப்படையில் வேல்முருகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை டிஜிபிக்கு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version