2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே தான் போட்டி என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். அப்போது, பல்வேறு துறைகளின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளை, “சமூக நீதி விடுதிகள்” என பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டதற்காக முதலமைச்சருக்கு அவர் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், திமுக அரசின் பாராட்டத்தக்க அறிவிப்புகளில் இதுவும் ஒன்று என குறிப்பிட்டார். தேர்தலுக்கு முன்னர், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கேங்மேன் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும் திருமாவளவன் கூறினார். வரும் தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையே தான் நேரடி போட்டி என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.