விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு, போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அனிசிமோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில், மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் நடைபெற்ற ஆட்டத்தில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் தொடக்கம் முதலே அபாரமாக விளையாடிய ஸ்வியாடெக், 6-2, 6-0 என்ற நேர் செட் கணக்கில் பென்சிக்கை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில், உலகின் முன்னணி வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா மற்றும் அமெரிக்காவின் அனிசிமோவா ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், அனிசிமோவா 6-4, 4-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில், இகா ஸ்வியாடெக் மற்றும் அனிசிமோவா ஆகியோர் மோத உள்ளனர்.
















