ஹரியானாவில், மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையை அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.
ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் ராதிகா யாதவ். 25 வயதான இவர், மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனை ஆவார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் இரட்டையர் தரவரிசையில், 113ஆவது இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில், வியாழக்கிழமை இவரது தந்தை, தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால், ராதிகாவை மூன்று முறை சுட்டுள்ளார். சப்தம் கேட்டு சென்ற அக்கம்பக்கத்தினர், ரத்தவெள்ளத்தில் கிடந்த ராதிகாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில், அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராதிகா ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குருகிராம் போலீசார், ராதிகாவின் தந்தையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், ராதிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் பதிவிட்டு வந்ததால் ஏற்பட்ட தகராறில் கொலை செய்ததாக தெரிய வந்துள்ளது.