உக்ரைன், ரஷ்யா இடையே நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணம் மீது 30 ஏவுகணைகள், 300 டிரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதேவேளை, பெரும்பாலான ஏவுகணைகள், டிரோன்கள் உக்ரைன் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டன.