பாகிஸ்தான் வெள்ளம்-234 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழை மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பெருமளவில் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், பஞ்சாப் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 234 ஆக அதிகரித்துள்ளதாக பாகிஸ்தான் பேரிடர் மேலாணமைத் துறை தெரிவித்துள்ளது.
செனாப், சிந்து மற்றும் ஜெலூம் ஆகிய நதிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், முசாஃபர்நகர், டேரா காஸி கான் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இத்துடன், கனமழையால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version