ஆபரேசன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை குறித்து வரும் 28-ம் தேதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆபரேசன் சிந்தூர் குறித்து, 16 மணி நேர விவாதம் நடத்த நாடாளுமன்ற அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்பிறகு தமிழ்நாட்டிலும் இரண்டு நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதனால், வரும் திங்கள் கிழமையன்று, மக்களவையிலும், 29 ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆபரேசன் சிந்தூர் குறித்த விவாதம் நடத்தப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. விவாதத்தின்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பதிலளிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.