குடியரசு துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெகதீப் தங்கர்

குடியரசுத் துணைத் தலைவர் பதவியிலிருந்து ஜக்தீப் தங்கர் ராஜினாமா செய்துள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ளார். அதில் மருத்துவக் காரணங்களுக்காக மருத்துவர்களின் அறிவுரைப்படி ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். தனக்கு அளித்த ஆதரவு, நல்ல உறவு, ஒத்துழைப்பு, அன்பு, நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றுக்காக குடியரசுத் தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜக்தீப் தங்கர் அதில் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவின் வேகமான பொருளாதார முன்னேற்றம் மற்றும் உலக அளவிலான வளர்ச்சிப் பயணம் உள்ளிட்டவற்றை கொண்ட சிறப்பான சகாப்தத்தில் தான் பதவி வகித்தது தனக்கு கிடைத்த பெருமை என்றும் ஜெக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version