2026-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றிருக்கிறது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதியுள்ள 8 நாடுகள் தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கடந்த மாதம் கனடா நாட்டு அணி தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இதன்மூலம், இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதிபெற்று வரலாறு படைத்ததுள்ளது.