வேளான் உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க அதிமுக ஆட்சியில் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்,
மக்களை காப்போம்- தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து கடந்த 7 ஆம் தேதி முதல் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருவாரூர் சென்ற அவர், அங்குள்ள விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியில் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டதாக கூறினார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடனை தங்களது ஆட்சியில் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் நலன்காக்கும் அரசாக அதிமுக ஆட்சி செயல்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.