இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்துள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் நிறைவடைந்த நிலையில், 2-1 என்ற கணக்கில், இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில், இரு அணிகளுக்கிடையேயான 4-வது போட்டி, மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தமிழக வீரர் சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால் மற்றும் ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 19 ரன்களிலும் ஹர்துல் தாக்கூர் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.