எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கைக்கு, மீனவர் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட படகுகளில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும்போது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகையும், அதில் இருந்த 5 மீனவர்களையும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் சிறைப்பிடித்தனர்.
இதேபோல், பாம்பனை சேர்ந்த டேவிட் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகும், அதில் இருந்த 9 மீனவர்களும் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். 14 மீனவர்களுக்கும், ஆகஸ்ட் 7-ந்தேதி வரை சிறைக்காவல் விதித்து, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.