திருவனந்தபுரத்தில் திங்களன்று காலமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் உடல், ஆலப்புழாவில் புதன்கிழமை, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவால் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேரள முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் திங்களன்று காலமானார் அவருக்கு வயது 101.
கட்சியினர், பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்குப் பின்னர் அச்சுதானந்தனன் உடல் புதனன்று அவருடைய சொந்த ஊரான ஆலப்புழா கொண்டுவரப்பட்டது. அங்குள்ள மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கானோர் அச்சுதானந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அச்சுதானந்தனின் உடல் தகனம் செய்யும் இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு முழு அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.