ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 840 ரூபாய் அதிகரித்து, சவரன் 74 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது.
2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதிகரித்த தங்கத்தின் விலை, அதன் பிறகு கணிசமாக குறைந்தது. கடந்த 2 மாதங்களாக தங்கத்தின் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சரிவே இதற்கு காரணமாகும். இன்றைய தினம் சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 9 ஆயிரத்து 285 ரூபாய்க்கும், ஒரு சவரன் 74 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 128 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி, ஒரு லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.