ஆபரண தங்கத்தின் விலை இன்றைய தினம் சவரனுக்கு, 120 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 6 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருவது, வாடிக்கையாளர்களிடையே சற்று மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ஆயிரத்து 440 ரூபாய் குறைந்தது. இந்த சூழலில் வாரத்தின் முதல் நாளான இன்று, சவரனுக்கு 120 ரூபாய் குறைந்திருக்கிறது.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம், 8 ஆயிரத்து 915 ரூபாய்க்கும், ஒரு சவரன் 71 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் 119 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி, ஒரு லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.