மயிலாடுதுறை நடைபெற்ற குதிரை ரேக்ளா வண்டி பயிற்சி ஓட்டம்

மயிலாடுதுறை அருகே நடைபெற்ற குதிரை ரேக்ளா வண்டி பயிற்சி ஓட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது :-

மயிலாடுதுறை நாகை திருவாரூர் பகுதிகளில் ரேக்ளா பந்தயங்களில் பங்கேற்பதற்கான குதிரைகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றை திருவிழா காலங்கள் மற்றும் , ரேக்ளா பந்தயம் நடைபெறும் நேரங்களில் போட்டி வைத்து வெற்றி பெறும் குதிரைகளை வளர்ப்பவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றது. இதில் வெற்றி பெறுவது மிகுந்த மரியாதைக்குரியதாக கருதப்படுகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை அருகே எலந்தங்குடி என்ற இடத்தில் குதிரை வண்டிகளுக்கான ரேக்ளா பயிற்சி பந்தய ஓட்டம் நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை நாகை திருவாரூர் காரைக்கால் பகுதியில் இருந்து குதிரை வண்டிகள் பங்கேற்றன. கரிச்சான் குதிரை நடுக்குதிரை பெரிய குதிரை என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்ற ரேக்ளா வண்டிகள் விறுவிறுப்பாக பந்தய எல்லையை தொட்டன. ஏராளமான ரசிகர்கள் பார்வையிட்டனர்

Exit mobile version