விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில்  ஊழியர்கள் பணியாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊழியர்கள் பணியாளர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

விழுப்புரத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நெடுஞ்சாலை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கொடி அசைத்து துவக்கி வைத்தார் பேரணி விழுப்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழுப்புரம் தலைமை மருத்துவமனையில் முடிவடைந்தது இதில் சாலை பணியாளர்கள் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் கலந்து கொண்டு தலைக்கவசம் உயிர் கவசம் சாலை விதிகளை மதித்து நடப்போம் குடிபோதையில் வாகனங்களை ஓட்டாதே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர் முன்னதாக சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

Exit mobile version