தொடர் விடுமுறை சென்னை திரும்பும் மக்களால் பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்..
3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்களால், செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிமீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை திரும்பும் வாகனங்கள் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி என்று தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குப் படையெடுத்தனர்.
தற்போது 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்த நிலையில் சொந்த ஊருக்குச் சென்ற லட்சக்கணக்கான பொதுமக்கள் மீண்டும் சென்னை வரத் தொடங்கி இருக்கின்றனர். அரசு பேருந்து, ஆம்னி பஸ்கள், சொந்த வாகனங்களில் பொதுமக்கள் பலரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடி மற்றும் மகேந்திரா சிட்டி வண்டலூர் ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது இதனால் வாகன ஓட்டிகள் மிக சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்
