மயிலாடுதுறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் பனிப்பொழிவு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு வாகனங்களை இயக்க முடியாமல் தினரும் வாகன ஓட்டிகள்:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, செம்பனார்கோவில் மணல்மேடு குத்தாலம் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடுமையாக பனிப்பொழிவு காணப்படுகிறது.கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் அதிகமான குளிர் நிலவிவந்த நிலையில் அதிகாலையில் தொடங்கிய பனிப்பொழிவு ஆனது பெய்து வருகிறது.குறைந்த தூரத்தில் இருக்கின்ற பொருள் கூட தெரியாத அளவிற்கு பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்களை ஒளிரவிட்டபடியே குறைவான வேகத்தில் வாகனங்களை இயக்கி செல்கின்றாலும் எதிரே வர கூடிய வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வயல்வெளிகளில் வெள்ளை போர்வை போர்த்தியது போல் பனி காணப்பட்டது. பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது
