தமிழகத்தில் பருவ மழை தொடங்கியிருக்கும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பலத்த மழை

செங்கல்பட்டு மாவட்டத்தில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது, குறிப்பாக வடகிழக்கு பருவமழை காலங்களில் பலத்த மழை பெய்துள்ளது. உதாரணமாக, அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு அதன் சுற்றியுள்ள மதுராந்தகம் செய்யோர் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் கிழக்கு கடற்கரை சாலை மறைமலைநகர் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து தற்பொழுது மழை பெய்து வருகிறது.

கார்த்திகை தீபம் நெருங்கி வரும் நிலையில் தற்போது பருவமழையானது தொடங்கி இருக்கிறது
செங்கல்பட்டு மாவட்டம் முழுக்க பரவலாக தற்போது மழை பெய்து வருகிறது ஏற்கனவே ஏறி செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரி குளங்கள் நிரம்பி உள்ள நிலையில் தற்பொழுது பருவ மழை தொடங்கியிருக்கிறது மேலும் மழை நீடித்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Exit mobile version