செங்கல்பட்டு மாவட்டம் அதை சுற்றியுள்ள செங்கல்பட்டு மதுராந்தகம் திருப்போரூர் திருக்கழுக்குன்றம் மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழையால் சாலைகளில் மழை நீர் கூறியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.
கடந்த 10 நாட்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் விட்டு விட்டு பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது இன்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரம் விடாத மழை கொட்டி தீர்த்தது.
இதில் அதிக அளவில் திருக்கழுக்குன்றத்தில் மழை பதிவாகியுள்ளது.
மேலும் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்ததால் பல இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
