திருவாரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மழை பெய்வதால்- பொதுமக்கள் மகிழ்ச்சி.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து 1மாதத்திற்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக சிரமப்பட்டு வந்த நிலையில் இன்று பகல் 11மணி முதல் திடீரென மழை பெய்தது. குறிப்பாக திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளான விளமல்,புலிவலம், கமலாபுரம், கண்கொடுத்தவணிதம், சேந்தமங்கலம் , வண்டாம்பாளை, காட்டூர், முசிறியம், பவித்திரமானிக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக வெயில் தாக்கம் குறைந்து குளிர்ந்த வானிலையை பொதுமக்கள் ரசித்து வருகின்றனர் .
