டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில், மயிலாடுதுறை, குத்தாலம், மல்லியம், தேரிழந்தூர், நீடூர், வில்லியநல்லூர், பட்டவர்த்தி, மணல்மேடு, தருமபுரம், மன்னம்பந்தல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடங்கிய மிதமான மழையானது இடி மின்னலுடன் கூடிய கனமழையாக பெய்தது.

















