ரெட் அலர்ட் மக்களே… கொட்டப்போகும் கனமழை ! எங்கு எச்சரிக்கை தெரியுமா ?

சென்னை : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் அதி கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதால், வானிலை ஆய்வு மையம் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நாளை (மே 25) மற்றும் நாளை மறுநாள் (மே 26) தினங்களில் அதி கனமழைக்கு சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் !

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 27 ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, இன்று (மே 24) தமிழ்நாட்டின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதிக மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, திருப்பூர், கன்னியாகுமரி. இவை தவிர, அண்டை மாநிலமான கேரளாவில் வரும் இரண்டு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, மாவட்ட நிர்வாகம் வழங்கும் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Exit mobile version