மயிலாடுதுறை மாவட்டத்தில் கடும் பனிமூட்டம், பொழுது விடிந்து பல மணி நேரங்களுக்கு பிறகும் பனிப்பொழிவு நீடித்த காரணத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வந்தது. நேற்று பிற்பகலுக்கு மேல் மழை நின்ற நிலையில் கடுமையான மூடுபனி காணப்படுகிறது. இரவு நேரங்களில் கடும் குளிர் வாட்டி வந்த நிலையில், இன்று காலை கடுமையான மூடுபனி நிலவியது. சூரியன் வந்த பிறகும் பல மணி நேரத்திற்கு மூடுபனி நிலவியதால் சாலையில் எதிரே வந்த வாகனங்கள் முன்னெச்சரிக்கையாக முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. இந்தப் பனி காரணமாக சளி சார்ந்த தொந்தரவுகள் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
