திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே நடைபெற்ற மருத்துவ முகாமினை
முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் மற்றும் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் துவக்கி வைத்தார்..
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஆர். காமராஜ் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழக உணவு துறை அமைச்சராக பணியாற்றி நன்னிலம் தொகுதி மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கி வந்த நிலையில்…
இன்று குடவாசல் வடக்கு ஒன்றியம் எரவாஞ்சேரி பகுதியில் தனது சொந்த நிதியில் இருந்து சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச இருதய மற்றும் பொது மருத்துவ முகாமினை முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் துவக்கி வைத்தார்..
அப்பொழுது பேசிய முன்னாள் அமைச்சர்.. நமது ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் முன்னாள் முதலமைச்சர் அம்மா கிளினிக்கை துவக்கி வைத்தார்.. எனவும், இந்த ஆட்சியில் ஒரு பள்ளிக்கூட தரம் உயர்த்த வில்லை எனவும் குற்றம் சாட்டினார்..
தொடர்ந்து நன்னிலம் தொகுதி மக்களுக்காக பணியாற்றி வரும் முன்னாள் அமைச்சர் காமராஜ் கடந்த மாதம் வலங்கைமான், குடவாசல், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தினர்.. இந்த முகாம்களில் 1000க்கும் மேற்பட்ட எளிய மக்கள் பயனடைந்தனர்.
இன்று குடவாசல் வடக்கு ஒன்றியம் எரவாஞ்சேரி பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்றது..
இந்த முகாமில்.. இருதய மற்றும் பொது மருத்துவம் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவப் பரிசோதனைகள் செய்தனர்.
இந்த முகாமில் நோயாளிகளுக்கு.. ரத்த அழுத்தம், இசிஜி.. எக்கோ.. உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.. மேலும் நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
குடவாசல் வடக்கு ஒன்றிய பகுதிகளான எரவாஞ்சேரி, கூந்தலூர், திருவீழிமிழலை, மணவாள நல்லூர், அன்னியூர், திருப்பாம்புரம், செருக்குடி, வடுக்குடி, சுரைக்காயூர், ஆலத்தூர், விளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்..
இந்த நிகழ்வில்.. தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர்.. டாக்டர் இனியன், குடவாசல் வடக்கு ஒன்றிய செயலாளர் செறுக்குடி ராஜேந்திரன்.. குடவாசல் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் எம். ஆர் தென்கோவன்.. வர்த்தக அணி திருவாரூர் மாவட்ட செயலாளர் ரயில் பாஸ்கர், நன்னிலம் நகர செயலாளர் பக்கிரிசாமி.. தகவல் தொழில்நுட்ப பிரிவு தஞ்சை மண்டல இணை செயலாளர் செல். சரவணன்..
தகவல் தொழில்நுட்ப பிரிவு திருவாரூர் மாவட்ட தலைவர் சின்ராஜ், மாவட்ட விவசாய அணி இணை செயலாளர் எம்ஜிஆர் கருப்பையன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் DRDA ராஜேந்திரன்… ஊராட்சி மன்ற தலைவர்..DRDA அறிவழகன், முன்னாள் அண்ணா தொழிற்சங்க நிர்வாகி இயேசு ராஜன்… மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் புவனேஸ்வரி வெங்கடேஷ்.. தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் லோகநாதன்.. மற்றும் கழக அனைத்து நிலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

















